நாட்டில் 63% பேர் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை: மத்திய அரசு

நாட்டில் 63% பேர் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, நாட்டில் 63% பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, மலைப்பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவில்லையெனில், ஊரடங்கு கடுமையாக்கப்படும். உணவகங்கள், கடைகள் மூடப்படும். பொதுபோக்குவரத்து தடை விதிக்கப்படும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 24% பேர் முகக்கவசம் அணிவதில்லை என தெரியவந்துள்ளது. 45% பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை. 63% பேர் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. 25% பேர் பயணங்களின் போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. 83% மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story