பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவு: தலைவர்கள் இரங்கல்


பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவு: தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 7 July 2021 4:12 AM GMT (Updated: 7 July 2021 4:12 AM GMT)

பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சினிமா உலகில் பல சாதனைகளை படைத்த திலீப் குமார் மறைவு கலை உலகத்திற்கு பேரிழப்பு” எனத்தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ திலீப் குமாரின் பங்களிப்பு இந்திய சினிமாவின் அடுத்த தலைமுறையினருக்கும் நினைவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story