மத்திய மந்திரி சபை கூட்டம் ரத்து - நாளை மறுநாள் நடைபெறும் என எதிர்பார்ப்பு


மத்திய மந்திரி சபை கூட்டம் ரத்து - நாளை மறுநாள் நடைபெறும் என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 July 2021 1:23 PM IST (Updated: 7 July 2021 1:23 PM IST)
t-max-icont-min-icon

மந்திரி சபை விரிவாக்கம் செய்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் மந்திரி சபை கூட்டம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

மத்திய மந்திரி சபை  கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரத்துக்கான  மந்திரி சபை மற்றும் மத்திய மந்திரி சபை  கூட்டம் இன்று நடைபெறுவதாக, அறிவிக்கப்பட்டிருந்து. 

கூட்டத்தின் போது,  மந்திரி  விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியான நிலையில்,  மந்திரி சபை  கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மந்திரி சபை  விரிவாக்கம் செய்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் மந்திரி சபை  கூட்டம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story