மத்திய மந்திரி சபை விரிவாக்கம்: புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி? முழுவிவரம்


மத்திய மந்திரி சபை விரிவாக்கம்: புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி? முழுவிவரம்
x

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.


புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய மந்திரிசபையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. 

இதன்படி ஜனாதிபதி மாளிகையில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரிசபையில் 43 பேர் இடம்பெற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 

தமிழகத்தின் எல்.முருகன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்குப் பதவி அளிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று பதவியேற்றவர்களில், 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யாருக்கு என்ன பதவி?

* தர்மேந்திர பிரதான்: கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

* ஹர்தீப் சிங் புரி: பெட்ரோலியம் ஊரக வளர்ச்சி வீட்டு வசதித் துறை

* பியூஷ் கோயல்: ஜவுளித் துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை

* ஸ்மிருதி இராணி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் தூய்மை இந்தியா திட்டம்

* மன்சுக் மாண்டவியா: சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனத் துறை

* அஸ்வினி வைஷ்ணவ்: ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு மந்திரி

* ஜோதிராதித்ய சிந்தியா: விமானப் போக்குவரத்து துறை

* அனுராக் தாக்கூர்: தகவல் ஒலிபரப்புத் துறை

* வீரேந்திர குமார்: சமூக நீதி மேம்பாட்டுத் துறை

* கிரண் ரிஜிஜூ: சட்டத்துறை

* கிஷன் ரெட்டி: வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி

* கிரிராஜ் சிங்: ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை

* பசுபதி குமார் பாரஸ்: உணவு பணப்படுத்துதல் துறை

* சர்பானந்த சோனாவால்: துறைமுகம் கப்பல் ஆயுஷ் துறை

* நாராயண் ராணே: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை

* ராஜ்குமார் சிங்: மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை

* பூபேந்தர் யாதவ்: சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை

* ராமசந்திர பிரசாத் சிங்: எக்கு துறை

* பிரஹலாத் ஜோஷி: நாடாளுமன்ற விவகாரத் துறை

* முக்தார் அப்பாஸ் நக்வி: சிறுபான்மையின நலத்துறை

* கஜேந்திர சிங் ஷெகாவாத்: ஜல்சக்தி துறை

* ராஜ்குமார் சிங்: மின் சக்தி துறை

* மகேந்திர நாத் பாண்டே: கனரக தொழில் துறை

* பார்ஷோத்தம் ரூபாலா: மீன்வளத்துறை, கால்நடை

* மோடி, அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பு:

பிரதமர் மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (கூடுதல் பொறுப்பு)
அமித்ஷா கூட்டுறவுத் துறை கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Next Story