தேசிய கல்விக்கொள்கையால் இந்திய கல்வி முறை ராட்சத பாய்ச்சலில் செல்கிறது - கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

தேசிய கல்விக்கொள்கையால் இந்திய கல்வி முறை ராட்சத பாய்ச்சலில் செல்கிறது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய மந்திரிசபை மாற்றத்தில், தர்மேந்திர பிரதானுக்கு மத்திய கல்வி இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று ஐ.ஐ.டி. இயக்குனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மத்திய கல்வி மந்திரி என்ற முறையில் முதல் முறையாக தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-
புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகத்தால், எதிர்கால இந்திய கல்வி முறை ராட்சத பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. இந்த கொள்கை இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவை சமமான அறிவுசார் சமூகமாக உருவாக்குவதில் மாணவர்களையும், இளைஞர்களையும் முதன்மை பங்குதாரர்களாக ஆக்குவதற்கு உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story