மும்பையில் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது - மாநகராட்சி அறிவிப்பு

மும்பையில் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மும்பை,
மும்பையில் பொது மக்கள் ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று மட்டும் நகரில் 45 ஆயிரத்து 171 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை நகரில் 46 லட்சத்து 81 ஆயிரத்து 780 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 12 லட்சத்து 47 ஆயிரத்து 410 பேர் 2 டோஸ் போட்டு உள்ளனர். மொத்தம் 59 லட்சத்து 29 ஆயிரத்து 190 பேர் தடுப்பூசி போட்டு இருப்பதாக மாநகராட்சி கூறியுள்ளது.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை அரசு, மாநகராட்சி தடுப்பூசி மையங்கள் செயல்படாது என மாநகராட்சி அறிவித்து உள்ளது. இடையூறுக்கு வருந்துவதாகவும் மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.
Related Tags :
Next Story