கொல்கத்தாவில் நடந்த போலி தடுப்பூசி முகாம் விவகாரம்- அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

போலி முகாம்கள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த முன்வந்துள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் பல இடங்களில் கடந்த மாதம், சில தனிநபர்கள் தடுப்பூசி முகாம்கள் நடத்தினர். அவை போலி முகாம்கள் என்பதால், அவற்றில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மேற்கு வங்காள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், கொல்கத்தா போலீசின் துப்பறியும் பிரிவை சேர்ந்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த குழுவினர், கொல்கத்தா மாநகராட்சி இணை ஆணையராக நடித்து போலி முகாம்களை நடத்திய டெபஞ்சன் தேவ் என்பவனையும், அவனுடைய கூட்டாளிகள் 8 பேரையும் கைது செய்தனர். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், போலி முகாம்கள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த முன்வந்துள்ளது. இவ்விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்த உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story