ஜிகா வைரஸ் கருவில் உள்ள சிசுவை பாதிக்கும் அபாயம் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க அறிவுரை

கர்ப்பிணிகள் காய்ச்சல் உள்பட அறிகுறி தென்பட்டால் ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
திருவனந்தபுரம்,
புதிதாக பரவி வரும் ஜிகா வைரஸ் பற்றி சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-
இந்த வைரஸ் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. இந்த வைரஸ் கருவில் உள்ள சிசுக்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்கள், ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 4 மாதம் வரையுள்ள கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. ஆதலால் கர்ப்பிணிகள் காய்ச்சல் உள்பட அறிகுறி தென்பட்டால் ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
மாநிலம் முழுவதும் ஜிகா வைரஸ் பரிசோதனை நடத்த தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும். அதே வேளையில் ஜிகா வைரஸ் குறித்து தேவையில்லாத பீதி வேண்டாம். சிகா வைரஸ் பாதித்தவர்களுக்கு தனியாக சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடையாது. ஆதலால், தேவையான ஓய்வுடன் இருக்க வேண்டும். தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story