கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்


கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 July 2021 6:34 PM IST (Updated: 10 July 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்ற வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் சற்று தணியத்தொடங்கியுள்ளது.  இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக முக்கிய சுற்றுலாத்தளங்கள் உள்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், 'தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என பதிவிட்டுள்ளார். தனது டுவிட்டுடன் கொரோனா இன்னும் ஓயவில்லை என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். 
1 More update

Next Story