கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு


கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2021 2:17 AM IST (Updated: 11 July 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவின் பாடசாலை பகுதியில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

திருவனந்தபுரம், 

கேரளாவின் பாடசாலை பகுதியில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

கேரளாவில் நேற்று திருவனந்தபுரம் நந்தன் கோட்டை சேர்ந்த 40 வயதான ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து ஜிகா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் அறிகுறி தென்பட்ட 44 பேரில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story