அரசியலில் நான் தலையிட முடியாது; அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்க வேண்டும்: புதுச்சேரி கவர்னர்

புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தடுப்பூசி திருவிழா
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் மூலம் 3-வது முறையாக தடுப்பூசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. வீராம்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலாளர் அருண் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த தடுப்பூசி திருவிழா நாைள (திங்கட்கிழமை) வரை 100 இடங்களில் நடக்கிறது.
நிகழ்ச்சியின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி
புதுச்சேரியில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மக்கள் மத்தியில் தயக்கம் இருந்தது. தற்போது அந்த தயக்கம் நீங்கியுள்ளது. கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா சூழ்நிலை முன்னேற்றத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கப்படலாம். எனவே ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும்.தற்போதைய வேகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாம் குறிப்பிட்ட இலக்கை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதிக்குள் அடைய முடியும். 3-வது அலை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. புதுச்சேரியில் தடுப்பூசிக்குத் தட்டுபாடு இல்லை. புதுச்சேரியில் இதுவரை டெங்கு காய்ச்சல் இல்லை. மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
அரசியலில் தலையிட முடியாது
முதல்-அமைச்சர் ரங்க சாமியை நான் சந்தித்தபோது, 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் தமிழகமும் பயன்பெறும். அதனால் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கையை வைத்திருக்கிறேன். அதற்கான செயல் திட்டத்தை தயார் செய்ய தலைமை செயலருக்குச் சொல்லி இருக்கிறேன். அரசியலில் நான் தலையிட முடியாது. ஆனால் இந்த மாநிலத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவராக அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்கி செயல்படுவதற்கான ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ேநற்று ஒேரநாளில் 12,016 ேபருக்கு தடுப்பூசி ேபாடப் பட்டது.
Related Tags :
Next Story