மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஆக்ரா,
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, 2021-2030 ஆண்டுக்கான மாநில மக்கள்தொகை கொள்கை திட்டத்தை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது. இதனை அனைத்து சமூகங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை முன்னிறுத்தியே மக்கள் தொகை கொள்கை திட்டம் 2021- 2030 உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மக்களும் உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story