கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு


கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2021 10:57 PM IST (Updated: 11 July 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். 

ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம்.

ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜிகா வைரஸ் பரவல் காரணமாக, கேரளாவில் 3-ம் கட்டமாக அறிகுறி தென்பட்ட 8 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 29 வயது மருத்துவமனை ஊழியர், 2 வயது குழந்தை மற்றும் 46 வயது நபருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. 

இதில் மருத்துவமனை ஊழியரை தவிர மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. கொசுக்களால் பரவும் இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story