"மேகதாது விவகாரம்: மாநிலங்களிடம் கருத்து கேட்டு முடிவு" - மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்


மேகதாது விவகாரம்: மாநிலங்களிடம் கருத்து கேட்டு முடிவு - மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்
x
தினத்தந்தி 13 July 2021 12:26 PM IST (Updated: 13 July 2021 1:06 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது விவகாரத்தில் காவிரி ஆறு ஓடும் அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்க வேண்டியுள்ளது என்று மத்திய மந்திரி ஜேந்திர சிங் ஷெகாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக அரசின்  மேகதாது திட்டத்திற்கு இதில் தொடர்புடைய மத்திய  அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை  மந்திரியை  கர்நாடக முதல்-மந்திரி  எடியூரப்பா சந்தித்தார். பெங்களூருவில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் காவிரி ஆறு ஓடும் அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்க வேண்டியுள்ளது என்றும் மேகதாது திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து கர்நாடகா அரசி விளக்கம் அளித்துள்ளது என்றும் விரைவில் மாநிலங்களின் கருத்துகள் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி  கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Next Story