வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா அதிகம் பரவி வருவது கவலை அளிக்கிறது- பிரதமர் மோடி


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 13 July 2021 2:45 PM IST (Updated: 13 July 2021 2:45 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்

புதுடெல்லி, 

கொரோனாவின் 2-வது அலை நாட்டின் பிற பகுதிகளில் குறைந்து வந்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் குறைய மறுக்கிறது. அங்கு சில மாநிலங்களில் பாதிப்பு அப்படியே நீடித்து வரும் நிலையில், சில பகுதிகளில் தொற்று அதிகரிக்கவும் செய்கிறது.

எனவே வடகிழக்கு பிராந்தியத்தில் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது;-

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ.23 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா அதிகம் பரவி வருவது கவலை அளிக்கிறது. மலைவாசஸ்தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில்  மக்கள் முககவசம்  இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம். நிலைமையைக் கட்டுப்படுத்த நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா வழிகாட்டுதல்களை  பின்பற்ற மக்களை ஊக்குவிக்க வேண்டு  என கூறினார்.

Next Story