திருப்பதி கோவிலில் 19 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் - தேவஸ்தானம் தகவல்


திருப்பதி கோவிலில் 19 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் - தேவஸ்தானம் தகவல்
x
தினத்தந்தி 14 July 2021 12:20 AM IST (Updated: 14 July 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் 19 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊர்டங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதன்படி நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 128 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 8 ஆயிரத்து 854 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 82 லட்சம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
1 More update

Next Story