ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானின் லக்ஷர் - இ- தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரானவர் என கூறப்படுகிறது மற்ற ஒருவரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து வெடிபொருட்ட்கள் மற்றும் நவீன ரக துப்பாகிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பலர் பதுங்கி இருக்கலாம் என கருதப்படுவதால் அங்கு தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story