கேரளாவில் கடந்த 12 தினங்களில் மட்டும் 288 பேருக்கு டெங்கு பாதிப்பு

கேரளாவில் கடந்த 12 தினங்களில் மட்டும் 288 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பருவ நோய்கள் அதிகரித்து வருகின்றன. காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது.
கடந்த 12 தினங்களில் மட்டும் இந்த பகுதிகளில் 288 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1037 பேர் டெங்கு அறிகுறிகள் உள்ளதால் இவர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. 288 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் டெங்கு நோயால் உறுதிப்படுத்தப்படாத நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மழைக்காலங்களில் கொசுக்களை கட்டுபடுத்துவதை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறை கோரியுள்ளது.
Related Tags :
Next Story