மேகதாது அணை விவகாரம் - ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டம்


மேகதாது அணை விவகாரம் - ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 14 July 2021 12:02 PM IST (Updated: 14 July 2021 12:02 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே அணை கட்டுவது சுமூகமாக பேசி முடிவு காணும் வகையில் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டி எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் தென்பகுதிகளிலுள்ள மற்ற மாநிலங்களில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதனால் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மற்ற மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முவைத்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு காணும் வகையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநில முதல்-மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.

4 மாநிலங்களின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படியில் மேகதாது விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடம் மத்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

Next Story