மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25-ம் தேதி முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
போபால்,
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கொரோனா வழிகாட்டுகள் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.
கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story