கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும்? - கர்நாடகா கொரோனா நிபுணர் குழு தலைவர் தகவல்


கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும்? - கர்நாடகா கொரோனா நிபுணர் குழு தலைவர் தகவல்
x
தினத்தந்தி 15 July 2021 6:21 AM GMT (Updated: 15 July 2021 6:21 AM GMT)

கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது குறித்து கர்நாடகா கொரோனா நிபுணர் குழு தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா,

இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலை முடிந்தபின், 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. தற்போது கொரோனா 2-வது அலையில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மறுபக்கம் 3-வது அலை தாக்கலாம் என வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என தொற்றுநோய் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்று சொல்வது கடினம் என்று கர்நாடகா கொரோனா நிபுணர் குழு தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கொரோனா 3-வது அலை எப்போது வரும், அது எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்று சொல்வது கடினம். கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு கர்நாடக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்களிடையே தடுப்பூசி மீது இருக்கும் தயக்கத்தை கவனிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story