இந்தியாவிற்கு தனியாக தேசிய மொழி இல்லை - மத்திய அரசு


இந்தியாவிற்கு தனியாக தேசிய மொழி இல்லை - மத்திய அரசு
x
தினத்தந்தி 15 July 2021 2:14 PM GMT (Updated: 15 July 2021 2:14 PM GMT)

இந்தியாவிற்கு என தனியாக தேசிய மொழி இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவிற்கு தனியாக தேசிய மொழி இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மத்திய அலுவல் மொழிகள் துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இந்தி மொழியில் வரும் பதில்கள் சர்ச்சையாகி வருகின்றன.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் பாண்டியராஜன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியாவிற்கு என தேசிய மொழிகள் எதுவும் கிடையாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால் எந்த மொழியில் பதில் அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஆங்கில கேள்விக்கு இந்தியில் பதில் அளிக்கும் அதிகாரிக்கு எந்த தண்டனையும் கிடையாது எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், அலுவல் மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்றும் மத்திய அரசு தனது பதிலில் கூறியுள்ளது.



Next Story