தேசிய செய்திகள்

பீகாரில் பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி...! + "||" + Sculptor in Bihar carves PM Modi's statue as money bank

பீகாரில் பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி...!

பீகாரில் பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி...!
பீகார் மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார்.
பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஒரு சிற்பி. இவர் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார். 

இதுகுறித்து சிற்பி பிரகாஷ் கூறுகையில் , பிரதமர் மோடி நாட்டை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உணர்ந்தேன். எனவே பணத்தை மிச்சப்படுத்த இதை செய்ய முடிவு செய்தேன். மேலும் இந்த உண்டியலில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பணத்தை நாணயமாக அல்லது தாளாக சேமிக்க முடியும் இந்த உண்டியல் செய்ய ஒரு மாதம் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதை தயாரித்த உடன் நான் அதை சந்தையில் விற்க ஆரம்பித்தேன். உலகை சிறந்தவரான நமது பிரதமரை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கவும் இது பயன்படுத்தப்படலாம் என்றும், எனக்கு இதுவரை எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அந்த உண்டியலில் உலகிலேயே தலை சிறந்த பிரதமர் என்ற வாசகத்தை எழுதியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் ரூ.905 கோடி கையிருப்பு? - அதிகாரிகள் விளக்கம்
பீகாரில் 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் 905 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
2. பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்
பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
5. பீகார், ஜம்முவில் 2 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்; தாக்குதல் சதி முறியடிப்பு
பீகாரை சேர்ந்த முகமது அர்மான் அலி (வயது 20), முகமது இஷானுல்லா (23) ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான லஷ்கர்-இ-முஸ்தபா அமைப்பில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.