மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 41 கோடியை கடந்தது: மத்திய அரசு தகவல்


மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 41 கோடியை கடந்தது: மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 16 July 2021 2:29 PM GMT (Updated: 16 July 2021 2:29 PM GMT)

தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வரும் மத்திய அரசு, அவற்றை இலவசமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

இதில் நேற்றைய நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 41.10 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் வழங்கியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் நேற்று காலை 8 மணி வரை 38.58 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், 2.51 கோடிக்கு அதிகமான டோஸ்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மீதமிருப்பதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் 52.90 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

 


Next Story