வேளாண் சீர்திருத்தங்களால் விவசாயிகள் பயன்பெற வேண்டும்: மத்திய வேளாண் துறை மந்திரி


வேளாண் சீர்திருத்தங்களால் விவசாயிகள் பயன்பெற வேண்டும்: மத்திய வேளாண் துறை மந்திரி
x
தினத்தந்தி 17 July 2021 1:36 AM IST (Updated: 17 July 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே என நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆா்) 93-ஆவது நிறுவன நிகழ்ச்சியில்  வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய வேளாண் துறையில் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு தொடா்ந்து விழிப்புணா்வுடன் செயல்பட்டு வருகிறது. 

முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட கொள்கைகளின் விளைவாகவே நாட்டின் வேளாண்மை துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அந்த குறைகளை மோடி அரசு சரி செய்துள்ளது. புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.  

அது மட்டுமின்றி வேளாண்மை துறை வளா்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதேயாகும். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீா்திருத்த சட்டங்களின் பலனை விவசாயிகள்  பெற வேண்டும்” என்றார்.   மேலும், கிஸான் சாரதி என்ற செயலியையும் அறிமுகப்படுத்தினார். 

Next Story