வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு


வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
x
தினத்தந்தி 17 July 2021 10:28 AM IST (Updated: 17 July 2021 10:28 AM IST)
t-max-icont-min-icon

வட மேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் ,தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் ,கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள்ள மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.
சென்னையில் நேற்று மாலை முதல் விடிய ,விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளா , கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story