தேசிய செய்திகள்

கொரோனா 3 வது அலை ஆகஸ்டில் தொடங்கும்; தினமும் 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - மூத்த விஞ்ஞானி தகவல் + "||" + Third Covid-19 wave likely in August, India to see 1 lakh cases daily: Top ICMR scientist

கொரோனா 3 வது அலை ஆகஸ்டில் தொடங்கும்; தினமும் 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - மூத்த விஞ்ஞானி தகவல்

கொரோனா 3 வது அலை ஆகஸ்டில் தொடங்கும்; தினமும் 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - மூத்த விஞ்ஞானி தகவல்
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கும் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் சாத்தியக்கூறு குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில்   லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்துடன் இணைந்து  ஒரு கணித  ஆய்வை மேற்கொண்டது.

இந்த தகவல்கள்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. மூன்றாவது அலை ஏற்படக்கூடிய நம்பத்தகுந்த ஆதாரங்களை அது கொடுத்துள்ளது.  அதே சமயம் 3 -வது அலை  இரண்டாவது அலை போல பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் ஆய்வு விளக்குகிறது.

கொரோனா மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில்  தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் பிரிவின் தலைவர் பேராசிரியர் சமிரன் பாண்டா கூறியதாவது:-

கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அப்போது  தினமும் கிட்டத்தட்ட 1 லட்சம் கொரோனா பாதிப்புகள்  உறுதிபடுத்தப்படலாம்.  

தற்போதைய சூழ்நிலையில், வைரஸ் மேலும் பரவும் தன்மைக்கு வழிவகுக்காவிட்டால், நிலைமை கொரோனா  முதல்   அலைக்கு ஒத்ததாக இருக்கும்.வைரஸ் மேலும் மாற்றம் அடைந்தால் நிலைமை மோசமாக இருக்கும்.

இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில்  மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றால் செய்யப்பட்ட கணித  கணிப்பில்  குறைந்த தடுப்பூசி விகிதங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா பாதிப்பில் அதிக  எழுச்சிக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.இருப்பினும், இது இரண்டாவது அலை போல கடுமையானதாக இருக்காது.

கூட்டம் கூடுவதை  தவிர்ப்பது, முககவசம்  அணிவது போன்ற மருந்தியல் அல்லாத தலையீடுகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.தற்போதைய தடுப்பூசி விகிதம் குறைவாக  உள்ளது. ஸ்மார்ட் தடுப்பூசி திட்டம் இருக்க வேண்டும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பரிசோதனைகளை அதிகரிக்க கலெக்டர்களுக்கு அறிவுரை
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2. கொரோனாவை ஒழிக்க சிவப்பு எறும்பு சட்னி...! மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தர செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
3. கோவில்கள் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை - தமிழக அரசு
சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும் வழிப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
4. கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
சுத்தம் செய்வதற்காக கோவை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5. 5-18 வயது பிரிவினரிடம் சோதனை...! பயாலஜிகல்-இ தடுப்பூசிக்கு அனுமதி
நிபந்தனைகளுடன் இரண்டு மற்றும் 3ம் கட்ட தடுப்பூசி சோதனையை நடத்த பயாலஜிகல்-இ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.