இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு


இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
x
தினத்தந்தி 17 July 2021 6:08 AM GMT (Updated: 2021-07-17T11:38:37+05:30)

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்லா,

இமாச்சல் மாநிலம் கின்னுர் மாவட்டத்தில் நேற்று இரவு அன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பதிவான நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 3.6  எனவும் , நடுக்கத்தின் மையப்பகுதி கின்னுர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தின் மூலம் எந்த பாதிப்புகளும் இழப்புகளும் நிகழவில்லை .

இதற்கு முன் கடந்த நேற்று முன் தினம் சிம்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story