யஷ்வந்தபுரம்-புதுச்சேரி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்


யஷ்வந்தபுரம்-புதுச்சேரி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 17 July 2021 11:17 PM GMT (Updated: 17 July 2021 11:17 PM GMT)

யஷ்வந்தபுரம்-புதுச்சேரி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

பெங்களூரு,

யஷ்வந்தபுரம்-புதுச்சேரி இடையே இயக்கப்பட இருக்கும் வாராந்திர சிறப்பு ரெயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

“யஷ்வந்தபுரம்-புதுச்சேரி இடையே வருகிற 23-ந் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ரெயில் (07393) இயங்க உள்ளது. மறுமார்க்கமாக 24-ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் புதுச்சேரி-யஷ்வந்தபுரம் இடையே ரெயில் (07394) இயங்குகிறது. இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் பானசாவடி, ஓசூர், தர்மபுரி, சேலம், ஆத்தூர், சின்ன சேலம், விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

யஷ்வந்தபுரம்-எம்.ஜி.ஆர் சென்னை சென்டிரல் இடையே வருகிற 23-ந் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ரெயில் (07387) இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக 24-ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் ரெயில் (07388) இயங்க உள்ளது. இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story