உடலுறவு கொள்ளாத பாலியல் வன்கொடுமையும் கற்பழிப்புதான் - ஐகோர்ட்டு தீர்ப்பு


உடலுறவு கொள்ளாத பாலியல் வன்கொடுமையும் கற்பழிப்புதான் - ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 July 2021 11:22 PM GMT (Updated: 2021-07-18T04:52:28+05:30)

உடலுறவு கொள்ளாமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்பு தான் என மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்த 33 வயது வாலிபர் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்ததாக செசன்ஸ் கோர்ட்டு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வாலிபர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருந்தார்.

அந்த மனுவில், ‘‘பெண்ணுடன் உடல் உறவு கொள்ளவில்லை. எனவே அதை கற்பழிப்பு என கூற முடியாது'' என கூறியிருந்தார்.

இதில் மனு மீதான விசாரணை நீதிபதி ரேவதி மோகிதே அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது ஐகோர்ட்டு கூறியதாவது:-

தடயவியல் ஆய்வில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிதான் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்களும் உள்ளன. உடல் உறவு வைக்காமல், விரலால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ் தான் வரும்.

இவ்வாறு ஐகோர்ட்டு கூறியது.

மேலும் வாலிபருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Next Story