கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளக்காடானது மும்பை நகரம்

மும்பையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
மும்பை,
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மும்பையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக மும்பையில் உள்ள மின்சார ரெயில் தடங்களில் தண்ணீர் புகுந்துள்ளதை அடுத்து மின்சார ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
முன்னதாக இன்று மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமன் நகர் பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மும்பையில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அடுத்து மும்பை மக்கள் சிரமத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story