டெல்லியில் கன்வார் யாத்திரை ரத்து


டெல்லியில் கன்வார் யாத்திரை ரத்து
x
தினத்தந்தி 19 July 2021 1:57 AM GMT (Updated: 19 July 2021 1:57 AM GMT)

கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக டெல்லியில் கன்வார் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கன்வார் யாத்திரை புகழ்பெற்றது. கன்வாரியாக்கள் என அழைக்கப்படும் சிவ பக்தர்கள், ஹரித்வார், கங்கோத்திரி போன்ற புனித தலங்களுக்கு நடைபயணம் சென்று தோளில் சுமக்கும் கன்வார் கம்புகளில் இருபுறமும் புனித நீரை சேமித்துக்கொள்வார்கள். அதை கொண்டு சென்று சிவ தலங்களில் பூஜை செய்து வேண்டுவது வழக்கம்.

கொரோனா சற்று தளர்வடைந்ததும் உத்தரபிரதேச அரசு கன்வார் யாத்திரைக்கு அனுமதி அளித்திருந்தது. இதற்கு கோர்ட்டு கண்டனம் தெரிவித்து மறுபரிசீலனை செய்யச் சொல்லியிருந்ததால் உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் கன்வார்யாத்திரை டெல்லியிலும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி பேரிடர் மேலாண்மை அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

Next Story