உத்தரபிரதேசம்: சம்பல் மாவட்டத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலி; 8 பேர் காயம்


உத்தரபிரதேசம்: சம்பல் மாவட்டத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலி; 8 பேர் காயம்
x
தினத்தந்தி 19 July 2021 9:10 AM IST (Updated: 19 July 2021 9:10 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

சம்பல்,

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ஜோய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆக்ரா-சண்டவுசி நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

லஹரவன் கிராமத்திற்கு அருகே நேற்று இரவு நடந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிகொண்டிருந்த பஸ் ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக அவர்கள் சென்ற பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் பழுதுபார்ப்பதற்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. சில பயணிகள் பஸ் பழுதுபார்க்கப்படுவதற்காக வெளியில் காத்திருந்தனர்.

 திடீரென, வேகமாக வந்த மற்றொரு பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது மோதியதில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை பஹோஜியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மோதிய, அந்த இரண்டாவது பேருந்து சம்பவ இடத்திற்கு அருகே கவிழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பேருந்தின் ஓட்டுநரும், கிளினரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story