உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: 23-ஆம் தேதி அயோத்தியிலிருந்து பிரசாரம் தொடக்கம் - மாயாவதி அறிவிப்பு


உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: 23-ஆம் தேதி அயோத்தியிலிருந்து பிரசாரம் தொடக்கம் - மாயாவதி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 July 2021 3:46 AM GMT (Updated: 2021-07-19T10:03:02+05:30)

சட்டப்பேரவைத் தேர்தலில் பிராமணர் சமூகத்தினரின் வாக்குகளை கவரும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரசாரம் அயோத்தியிலிருந்து தொடங்கப்பட உள்ளது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

வரவிருக்கும் உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத்  தேர்தலில்  பிராமணர் சமூகத்தினரின் வாக்குகளை கவரும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தோதல் பிரசாரம் அயோத்தியிலிருந்து தொடங்கப்பட உள்ளது என்று அக் கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மேலும், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் பிராமணா் சமூகத்தினரின் நலன் காக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தார். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சியில் பிராமணர் சமூகத்தினரின் நலன் காக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுகிறது என்றார்.

மேலும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த விவகாரத்தை இன்று தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பகுஜன் சமாஜ் கட்சி கேள்வி எழுப்பும் என்பதோடு, பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயா்வு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்களையும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவர் என்று அவா் கூறினார்.

Next Story