நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அசாதாரண சுழலை எதிர்கொண்டோம் - பியூஷ் கோயல்


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அசாதாரண சுழலை எதிர்கொண்டோம் - பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 19 July 2021 2:02 PM IST (Updated: 19 July 2021 2:02 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை தலைவர் பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அசாதாரண சுழலை எதிர்கொண்டோம். மாநிலங்களவையில், அவைத் தலைவரின் உரையின்போது கூட இடையூறு செய்தார்கள் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story