கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்கிறாரா? பா.ஜனதா தலைவர் பேசிய ஆடியோவால் பரபரப்பு


கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்கிறாரா? பா.ஜனதா தலைவர் பேசிய ஆடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 July 2021 7:51 PM GMT (Updated: 2021-07-20T01:21:51+05:30)

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக சமீபகாலமாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றிவிட்டு அடுத்த சட்டசபை தேர்தலில் புதியவரை களமிறக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. எடியூரப்பா ராஜினாமா குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கட்சி நிர்வாகி ஒருவருடன் செல்போனில் பேசிய உரையாடல் பதிவு (ஆடியோ) வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “முதல்-மந்திரி எடியூரப்பா பதவி விலகுகிறார். டெல்லியில் இருப்பவர் (அதாவது மறைமுகமாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை குறிப்பிட்டார்.) புதிய முதல்-மந்திரி ஆகிறார். மூத்த மந்திரிகளான ஈசுவரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோரின் காலமும் முடிவுக்கு வருகிறது. இதை யாரிடமும் கூற வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். துளு மொழியில் இடம் பெற்றுள்ள இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவியது. ஆனால் இதனை நளின்குமார் கட்டீல் மறுத்துள்ளார்.

Next Story