தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு + "||" + Govt's excise collections on petrol, diesel jumps 88% to Rs 3.35 lakh cr

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன.
புதுடெல்லி, 

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை குறைந்ததால் சர்வதேச சந்தையில் அதன் விலை வெகுவாக சரிந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன. இதனால், கடந்த 2020-21-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்ந்ததாகவும், இது 88 சதவீத அதிகரிப்பு எனவும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை ராஜாங்க மந்திரி ரமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

2018-19-ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.2.13 லட்சம் கோடியாக இருந்ததாகவும் அவர் கூறினார். 2020-21-ம் ஆண்டில் கலால் வரி ரூ.3.35 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்கப்பட்டதால் கலால் வரி வசூல் இந்த அளவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. செப்டம்பர் 18: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.
2. செப்டம்பர் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 12-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.
3. செப்டம்பர் 16: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.
4. செப்டம்பர் 15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி.யா? 17-ந் தேதி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பின்கீழ் கொண்டு வருவது தொடர்பாக 17-ந் தேதி நடக்க உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.