தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம்: மத்திய இணை மந்திரி தகவல் + "||" + Timeline for Aadhar linking with ration card extended upto Sept 30: Govt

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம்: மத்திய இணை மந்திரி தகவல்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம்: மத்திய இணை மந்திரி தகவல்
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வரை 92.8% ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் தமிழகத்துக்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 41 கோடியை கடந்தது: மத்திய அரசு தகவல்
தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வரும் மத்திய அரசு, அவற்றை இலவசமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
2. பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு: மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு
பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மத்திய கல்வி மந்திரி தெரிவித்தார்.
3. 20 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு விநியோகம் - மத்திய அரசு தகவல்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 20.28 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. இட ஒதுக்கீடு வழக்கு: மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது - டாக்டர் ராமதாஸ்
இட ஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.