‘செல்போன் ஒட்டுக்கேட்பு தனியுரிமையை மொத்தமாக மீறிய செயல்’ - மத்திய அரசு மீது அகிலேஷ் யாதவ் தாக்கு


‘செல்போன் ஒட்டுக்கேட்பு தனியுரிமையை மொத்தமாக மீறிய செயல்’ - மத்திய அரசு மீது அகிலேஷ் யாதவ் தாக்கு
x
தினத்தந்தி 20 July 2021 10:52 PM IST (Updated: 20 July 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

‘செல்போன் ஒட்டுக்கேட்பு தனியுரிமையை மொத்தமாக மீறிய செயல் என்று மத்திய அரசு மீது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தாக்கும் வகையில் பேசியுள்ளார்.

லக்னோ, 

இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருளான ‘பெகாசஸ்’-ஐ பயன்படுத்தி இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஓட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சிலரின் தனிப்பட்ட செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்டது, ஒட்டுமொத்தமாக தனியுரிமையை மீறிய செயல். 

போன்களை உளவு பார்ப்பது ஜனநாயகத்தில் குற்றச்செயல். பா.ஜ.க. இதைச் செய்திருந்தால், தண்டிக்கத்தக்கது. ஒருவேளை இதுபற்றி தங்களுக்கு தெரியாது என்று பா.ஜ.க. அரசு கூறுமானால், தேசிய பாதுகாப்பில் அவர்களின் தோல்வியை இது காட்டுகிறது.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story