பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வருவாய் அதிகரிப்பு- மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வரும் பேராசை பிடித்த வட்டிக்கடைக்காரரா? என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த நிதியாண்டில் கடுமையாக உயர்த்தப்பட்டது. அதனால், கடந்த நிதியாண்டில், கலால் வரி வருவாய் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருப்பதாகவும், இது முந்தைய நிதியாண்டை விட 88 சதவீதம் அதிகம் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இச்செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒருபுறம் மத்திய அரசு மக்களை கடன் வாங்க தூண்டுகிறது. மறுபுறம், வரிகொள்ளை மூலமாக சரமாரியாக சம்பாதித்து வருகிறது.இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வரும் பேராசை பிடித்த வட்டிக்கடைக்காரரா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story