கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

கேரளாவில் இதுவரை ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 38- ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் சமீப நாட்களாக ஜிகா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இதுவரை 37- பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உடல் நிலை திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
தற்போது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து, குணமாகி, 30 பேர் வீடு திரும்பி விட்டதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story