பக்ரீத் பண்டிகை: இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் படை வீரர்கள்


பக்ரீத் பண்டிகை: இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் படை வீரர்கள்
x
தினத்தந்தி 21 July 2021 2:24 PM GMT (Updated: 21 July 2021 2:24 PM GMT)

கொரோனா காலம் என்பதால் போதிய சமூக இடைவெளியுடன் நாடு முழுக்க பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி, 

அன்பையும் தியாகத்தையும் வெளிக்காட்டும் விழா பக்ரீத். இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் பக்ரீத் திருநாளும் ஒன்று. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளார் தனது மகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூறும் வகையிலும், அவரின் தியாகத்தை போற்றும் வகையில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.

கொரோனா காலம் என்பதால் போதிய சமூக இடைவெளியுடன் நாடு முழுக்க பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் திருநாள் பகிர்ந்து அளிக்கும் பண்பை போதிக்கும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களிடம் உள்ள உணவையும், பொருளையும் பகிர்ந்து அளிக்கும் தினமாகும் இது.

இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

ராஜஸ்தானில் உள்ள பர்மார் எல்லை பகுதியான பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.


Next Story