தேசிய செய்திகள்

மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைப்பு + "||" + Lok Sabha adjourned till 11 am tomorrow

மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைப்பு

மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், எதிர்க்கட்சி அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு கூடிய நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மதியம் கூடிய மக்களவை எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாளை (ஜூலை 23) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.