குஜராத்தில் 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

ஜூலை 26 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காந்திநகர்,
இந்தியாவில் கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை அடுத்து மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிக்கு வரவிரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை பொறுத்தவரை இன்று புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 370 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story