பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பஸ்கள் இயக்கம்


பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 22 July 2021 4:50 PM GMT (Updated: 2021-07-22T22:20:18+05:30)

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கொரோனா பரவல் காரணமாக அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் பிறகு ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்களை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. (கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்) தெரிவித்துள்ளது.

ராஜஹம்ச பஸ்களில் ரூ.430, படுக்கையுடன் கூடிய குளிர்சாதன பஸ்களில் ரூ.740, ஐராவத் கிளப் பஸ்களில் பகலில் ரூ.600, இரவில் ரூ.690-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து இரவு 10 மணி, இரவு 11.38 மணி, காலை 9.31 மணி, இரவு 10.35 மணிக்கு பஸ்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பஸ்கள் ஓசூர், கிருஷ்ணா வழியாக இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வெளிமாநில பஸ் போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்காததால், இந்த பஸ்கள் தமிழ்நாட்டில் எங்கும் நிற்காது என்று கூறப்படுகிறது.

Next Story