கட்டுமான அதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டியதாக பரம்பீர் சிங் உள்பட 6 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

கட்டுமான அதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டியதாக முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் உள்பட 6 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான அதிபர் புகார்
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மும்பை கார் வெடிகுண்டு வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின்வாசே கைது செய்யப்பட்டதை அடுத்து, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார்.இந்தநிலையில் பரம்பீர் சிங் உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது கட்டுமான அதிபா் ஒருவர் மெரின்டிரைவ் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க பரம்பீர்சிங் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.15 கோடி கேட்டதாக கூறியுள்ளார்.
பரம்பீர்சிங் மீது வழக்கு
இதையடுத்து மெரின் டிரைவ் போலீசார் கட்டுமான அதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டியதாக முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், துணை கமிஷனர் அக்பர் பதான், இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆஷா கோர்கே, நந்தகுமார் கோபாலே மற்றும் சஞ்சய் பாட்டீல் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் கட்டுமான அதிபர்கள் சுனில் ஜெயில், சஞ்சய் பூர்ணிமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீஸ் அதிகாரி அனுப் தாங்கேயை மீண்டும் பணியில் சேர்க்க பரம்பீர் சிங் ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட வழக்கையும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
Related Tags :
Next Story