தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு + "||" + Over A Cup Of Tea, Amarinder Singh And Navjot Sidhu Press Reset

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்குடன்  சித்து சந்திப்பு
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து , முதல் மந்திரி அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
அமிர்தசரஸ்,

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து , முதல் மந்திரிஅமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த சூழலில், இன்று காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிலையில்  அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திற்கு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்துவும் இந்த நிகழ்வில் பங்கேற்று,  அமரீந்தர் சிங்குடன்ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்விற்கு பிறகு, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிகழ்வில் முதல் மந்திரி  உள்பட அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்மூலம், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பஞ்சாப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதை நீங்கள் பார்த்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்: அமரீந்தர் சிங் வேதனை
பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து அமரீந்தர் சிங் இன்று மாலை ராஜினாமா செய்தார்.
2. பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா
பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
3. ராஜினாமா செய்கிறாரா பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்?
அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் பஞ்சாப் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
4. பெரியார் பிறந்த நாள்: ராகுல் காந்தி டுவிட்
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. ''ஹேப்பி பர்த் டே மோடி ஜி!’’ - பிரதமருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.