ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீர‌ர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீர‌ர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 23 July 2021 1:50 PM IST (Updated: 23 July 2021 1:50 PM IST)
t-max-icont-min-icon

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீர‌ர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள். 

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான். மொத்தம் 18 விளையாட்டுகளில் பதக்கத்துக்காக மல்லுகட்ட காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், வில்வித்தை, ஆக்கி ஆகிய பந்தயங்களில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு முழு தேசத்தின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் குழுவினருடன் உள்ளன. அனைத்து இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் சிறந்து விளங்குவீர்கள், பரிசுகளை வெல்வீர்கள், நமது நாட்டை பெருமைப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story