கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 July 2021 4:23 PM GMT (Updated: 23 July 2021 4:23 PM GMT)

கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெஙகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலைபாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,91,699 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,323 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,243 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,31,226 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 24,127 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story