மராட்டியத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்: அஜித்பவார்

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
அஜித்பவார் கருத்து
மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மும்பையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து உள்ளன.இந்தநிலையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வெளியே செல்ல படிப்படியாக அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து. இதுகுறித்து அடுத்த 2 நாட்களில் முதல்-மந்திரியிடம் பேச உள்ளேன்.
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
அதே நேரத்தில் எனது கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு தரப்பிற்கும் ஒரு பார்வை இருக்கும். மருத்துவ துறையினர் வித்தியாசமான முறையில் பார்க்கலாம். சிலர் அடுத்த 100 அல்லது 120 நாட்கள் மிக முக்கியமான நாட்கள் என கூறுகின்றனர். எனவே இந்த நாட்களில் ஒவ்வொருவரும் விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story